செப், 4
உங்க உடல் எடையை குறைத்து ஒரு ஆரோக்கியமான சருமத்தை நீங்கள் பெற விரும்பினால் அதற்கு பீர்க்கங்காய் உங்களுக்கு ஒரு நல்ல பலனை தரும். பீர்க்கங்காயில் உள்ள நீர்ச்சத்து உங்களுக்கு எடை இழப்பை தருவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறைந்த கலோரியை கொண்ட காயாகும். இது உங்களுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன.
பீர்க்கங்காயில் உள்ள பெப்டைட் மற்றும் ஆல்கலாயிட் என்கிற இரண்டும் இயற்கையான இன்சுலினாக செயல்படுகிறது. ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
பீர்க்கங்காயில் ஏற்கனவே குறைந்த கலோரிகள் காணப்படுகின்றன. இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. கொழுப்பை சரியாக ஜீரணித்து உறிஞ்சும் உணவு இழைகளால் நிரம்பியுள்ளது. மேலும் இதை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய எண்ணம் தோன்றும். அதனால் நீங்கள் நொறுக்கு தீனிகளை வாங்கி சாப்பிட மாட்டீர்கள். குப்பை உணவுகளை தவிர்க்க முயல்வீர்கள். இதனாலேயே உங்க உடல் எடையை குறைக்க முடியும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. பீர்க்கங்காயில் உள்ள பெப்டைடுகள் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. இவை உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். இது நமது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இது உடலில் சர்க்கரையை முறையாக சுரக்கவும் உறிஞ்சவும் உதவுகிறது .
கண் தொற்று, கல்லீரல் தொற்று அல்லது வயிற்று தொற்று போன்றவை அடிக்கடி ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் நம் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது தான். ஆனால் பீர்க்கங்காயில் உள்ள தாதுக்கள், வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், தியாமின், ரைபோஃப்ளேவின் மற்றும் துத்தநாகம் போன்றவை உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. இது அழற்சியை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது.
இரும்புச் சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படுகிற நிறைய பேர் இரத்த சோகை போன்ற பிரச்சினைகளை சந்த்திக்கின்றனர். இது சோர்வு மற்றும் பலவீனம் போன்ற தொல்லைகளை உண்டாக்குகிறது. நம் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தியை பராமரிக்க இரும்புச் சத்து மிக முக்கியமானது. இதன் மூலம் உங்க உறுப்புகளை சரியாக செயல்படுத்த முடியும். சிவப்பு இரத்த அணுக்களை ஒருங்கிணைக்க விட்டமின் பி6 மிகவும் அவசியம். இந்த சத்துக்கள் அனைத்தும் பீர்க்கங்காயில் அதிகளவு உள்ளது.
சரும பிரச்சனைகள் பெரும்பாலும் குடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. எனவே வாரத்திற்கு இரண்டு முறையாவது பீர்க்கங்காய் சேர்ப்பது உங்க சருமத்தை பளபளக்க வைக்கும். சில வாரங்களுக்குள் உங்க சருமழகு மற்றும் குடல் ஆரோக்கியத்தில் மாற்றத்தை காண்பீர்கள். எனவே இந்த பீர்க்கங்காயை உணவில் சேர்த்து வாருங்கள். முடிந்தால் சூப் போட்டு குடியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.