கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் கட்டிட கலை பிரிவில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 25வது ஆண்டின் சந்திப்பு நிகழ்ச்சி 19.08.2023 அன்று அல்ஹாஜ் தஸ்தகீர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.
கட்டிட கலை பிரிவின் முதலாமாண்டு மாணவரும் கீழக்கரை ரோட்டரி கிளப் தலைவருமான பொறியாளர் கபீர் கலந்து கொண்டு 25ம் ஆண்டு அடையாள சட்டையை அறிமுகப்படுத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் காதர்மீரா,கீழை ராசா என்ற முகம்மது ரஜாக்கான் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசீம் அனைவரையும் வரவேற்றார்.
ஜஹாங்கிர்.
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.