Spread the love

ஆக, 20

நாம் உணவில் பயன்படுத்தும் பூண்டு பலவிதமான நன்மைகள் நிறைந்த ஒன்றாகும். பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் பூண்டு சாப்பிடக் கொடுத்து 12 வாரங்களுக்கு ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அவ்வாறாக சாப்பிடவர்களுக்கு காமன் கோல்ட் எனப்படும் சளித் தொல்லை ஏற்படும் வாய்ப்பு 63% குறைவாக இருந்தது. சளியால் பாதிக்கப்பட்டவர்கள் பூண்டு சாப்பிட்டால் அவர்களுக்கு சளித் தொல்லை இருக்கும் நாட்களும் குறைந்தது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

கார்டியோ வாஸ்குலார் டிசீஸ் எனப்படும் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகளில் இருந்து பூண்டு தற்காக்கும். உயர் ரத்த அழுத்தம் தான் இந்த நோய்கள் ஏற்பட முக்கியக் காரணி. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் பூண்டுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பது உறுதியாகியுள்ளது.

பூண்டு எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. இதனால் இதய நோய்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

பூண்டில், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளது. இதில் உள்ள அம்சங்கள் டெமென்சியா, அல்சைமர் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். அதிகளவில் பூண்டு பயன்பாடு ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் என்ஸைம்களை அதிகரிக்கிறது.

பூண்டு நீண்ட ஆயுள் வழங்கக்கூடியது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. தொற்று நோய்களை அண்டவிடாமல் வைக்கிறது. இவற்றால் மனிதனின் ஆயுட்காலம் கூட பூண்டு வழிவகை செய்கிறது.

பூண்டு விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. அயர்ச்சியைப் போக்கும். உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் போது தேவையான சத்துக்களைத் தரும். பண்டைய கிரேக்க காலத்தில் ஒலிம்பிக் வீரர்களுக்கு பூண்டு கொடுக்கப்பட்டது.

பூண்டு உடலில் தேங்கும் நச்சுக்களை அகற்றும் தன்மை கொண்டது. கார் பேட்டரி தொழிற்சாலையில் வேலை பார்பவர்களிக்கு 4 வாரம் தொடர்ந்து பூண்டு சேர்த்த உணவு வழங்கப்பட்டு அவர்களி ரத்த மாதிரி சோதிக்கப்பட்டது. அதில் முன்பைவிட அவர்களின் ரத்தத்தில் 19% காரீயம் அளவு குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆதலால் பூண்டு உடலில் உள்ள நச்சுக்களை அளிக்கவல்லது.

பூண்டு எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அளவைக் கூட்டும். ஆஸ்டியோஆர்த்திரிட்டஸ் நோயால் அவதிப்படுவோர் பூண்டு, வெங்காயம் உணவில் சேர்ப்பது அவசியம்.

பூண்டின் சுவையும், மனமும் அலாதி. சைவம், அசைவம் என பலதரப்பட்ட உணவுகளுடன் பொருந்திப் போகும். அதனாலேயே அதை பல வகை உணவில் சேர்ப்பது மிகவும் எளிதாக இருக்கிறது. பூண்டில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் கூட வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துதல், அலர்ஜியை உருவாக்குதல் போன்ற சில அசவுகரியங்களும் உள்ளன. ரத்த அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்வோர் பூண்டை மருத்துவரின் ஆலோசனைப் படி உட்கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *