கீழக்கரை ஆக, 5
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் மெத்தன போக்கினை கடைபிடிப்பதால் நாய்க்கடிக்கு ஆளாகும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
இது விசயமாக தெற்குத்தெரு ஜமாத் சார்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அதில் உடனடியாக நாய்கள் பிரச்சினைக்கு நகராட்சி நிர்வாகம் தீர்வு காணவேண்டுமென்றும் அப்படி தீர்வு காணப்படவில்லையென்றால் எதிர்வரும் 11.08.2023 வெள்ளிக்கிழமை பகல் ஜும் ஆ தொழுக்கைக்கு பிறகு நகராட்சியை கண்டித்து மிகப்பெரிய மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவதோடு இனிவரும் காலங்களில் நகராட்சி சம்பந்தமான எந்த நோட்டீஸையும் பள்ளியில் அறிவிப்பு செய்வதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை KLK வெல்ஃபேர் கமிட்டி முழுமனதுடன் வரவேற்பதோடு தெற்குத்தெரு ஜமாத் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்குத்தெரு ஜமாத் நிர்வாக அறிவிப்பினை போலவே மற்ற ஜமாத்துகளும் அறிவிப்பு செய்வதோடு நாய்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஆதரவு வழங்கிட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெற்குத்தெரு ஜமாத் அறிவிப்பினை வரவேற்று ஆதரவு நல்கிய மின்ஹாஜ் பள்ளி ஜமாத் நிர்வாகத்துக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என KLK வெல்ஃபேர் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜஹாங்கிர்.
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.