கீழக்கரை ஆக, 4
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வெறி நாய்களும் சொறி நாய்களும் சுற்றி திரிவதால் தினமும் பொதுமக்களை கடித்து குதறி வருவது அதிர்ச்சியளிப்பதாக 18வது வார்டு SDPI கட்சி கவுன்சிலர் சக்கினாபேகம் கூறினார்.
இதுகுறித்து நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதாவிடம் இன்று காலையில் புகார் மனு அளித்தவர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நாய்களை பிடித்து ஊருக்கு வெளியிலோ?அல்லது நாய் பிரியர்களிடமோ ஒப்படைக்க வேண்டுமென்றும் தவறும்பட்சத்தில் எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவரது அதிரடி அறிவிப்பினை ஒட்டு மொத்த பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
ஜஹாங்கீர்.
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.