நாகர்கோவில் ஆகஸ்ட், 17
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் 300 நாற்காலிகளை வழங்கி இருக்கிறார். இந்த நாற்காலிகளை ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் டாக்டர் கிளாரன்ஸ் டெவி தலைமை தாங்கினார். விஜய்வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாற்காலிகளை கல்லூரி டீன் கிளாரன்ஸ் டெவியிடம் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.