கீழக்கரை ஆகஸ்ட், 15
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, நகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி சிறப்புரையற்றினார்கள். இவ்விழாவில் அனைத்து கவுன்சிலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், மற்றும் நகராட்சி அலுவலர்கள் துப்பரவு பணியாளர்களும் கலந்துக்கொண்டார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.