கீழக்கரை ஆகஸ்ட், 14
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் துணைக் காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் 75 வது சுதந்திர நாளை கொண்டாடும் வண்ணம் தேசியக்கொடி அணிவகுப்பு நடத்தினர். கீழக்கரை ஏர்வாடி முக்கு ரோடிலிருந்து கடற்கரை வரை ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் முன்னிலையில் காவல் துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் கையில் தேசியக்கொடி ஏந்திய வண்ணம் சென்றனர். இதில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மகளிர் காவலர்கள் கலந்துகொண்டனர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.