ராமநாதபுரம் ஏப்ரல், 6
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் திடீர் திடீர் என்று வரும் வைரல் காய்ச்சலால் அணைத்து மக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் குறிப்பாக இந்த காச்சலால் அதிகமாக குழந்தைகளே பாதிப்புள்ளாகிறார்கள். மேலும் தமிழ் நாடு அரசு பல்வேறு நல்ல முயற்சிகள் எடுத்தாலும் பல்வேறு மாவட்ட அரசு தாலுகா மருத்துவமனைகளில் 24 மணிநேர வசதிகள் இல்லாதததால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் சென்று அங்குள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சென்று மருத்துவம் பார்க்கவேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருதயம், பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் பரணிக்குமார் நிர்வாகத்தில் செயல்பட்டுவரும் ஆரோக்யா மருத்துவமனை தன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் சூழ்நிலை அறிந்து செலவை அதிகரிக்காமல் 24 மணி நேரமும் நல்லதொரு சிகிச்சையை அனைத்து மக்களுக்கும் அளித்து வருகிறார்கள். மேலும் அங்கே பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அங்கே சிகிச்சைபெறும் அனைவரிடமும் அன்பாக உபசரிக்கும் விதம் அனைவரிடமும் பாராட்டை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதை நேரடியாக பயன்பெற்றவர் என்றடிப்படையில் நமது வணக்கம் பாரதம் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா தகவல் தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.