கீழக்கரை ஆகஸ்ட், 13
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் சாலையோரங்களை ஆக்கிரமித்து வரும் படிக்கட்டுகள், பலகைகள், தாழ்வாரங்கள் போன்றவற்றை அகற்ற கீழக்கரை நகராட்சி நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணம் பொது மக்களுக்கு போதிய அறிவிப்பு விடுத்த பின்னர் இந்த ஆக்கிரமிப்பு நிகழ்வு நடைபெறும் கீழக்கரை நகராட்சி சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.