புதுச்சேரி பிப், 18
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு அதிகாலை பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைவாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 குறைந்தபட்ச வெப்பத்தின் நிலை 21 முதல் 22 செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.