கீழக்கரை ஆகஸ்ட், 11
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, கண்ணாடி வாப்பா அறக்கட்டளை மற்றும் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு இணைந்து இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை 20 வது வார்டுக்குட்பட்ட பெத்திரி தெருவில் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் தலைவர் ஹாமிது இபுராஹிம் வழிகாட்டலிலும் 20 வது வார்டு கவுன்சிலர் சேக் ஹுசைன் முயற்சியில் வரும் 12 ம் தேதி காலை 9 மணியளவில் சதக் அப்துல் காதர் துவக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதில் 20 வது வார்டு பகுதியான பெத்திரி தெரு, 21 குச்சி மீனவர் குப்பம், முகம்மது காசிம் அப்பா தர்ஹா (பள்ளம்) ஏரியா மக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.