கோயம்புத்தூர் ஜன, 1
சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் சாலையில் இருபுறமும் சாக்கடை கால்வாய் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் குழிகள் தோண்ட ப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வீடுகளுக்கு செல்வதற்கு வழி இல்லாமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே சாக்கடை அமைக்க குழி தோண்ட இரு கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சாக்கடை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. 15 நாட்களாக பணி நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் திருச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது