திருவண்ணாமலை டிச, 31
தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப் படை வசதிகள், பராமரிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதார குழுவினர் கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 5ம்தேதி வரை ஆய்வு செய்தனர்.
அதன்படி கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர். திருவண்ணாமலை, தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 14 ஆரம்ப சுகாதார நிலையங்களை மத்திய அரசின் சுகாதார குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் கலசப்பாக்கம் அடுத்த மேல்வில்வ ராயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவம்பர் மாதம் குஜராத் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் வியாஸ், சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த மிக்கியா லெப்சான் கொண்ட மருத்துவ க்குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 93.46 மதி ப்பெண்கள் பெற்று மேல்வில்வ ராயநல்லூர் சுகாதார நிலையம் முதலிடம் பெற்றது.