ஐரோப்பா டிச, 22
பறவைக் காய்ச்சல் ஐரோப்பிய நாடுகளை வரலாறு காணாத வகையில் உலுக்கி வருகிறது. கடந்த ஓராண்டில் 37 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 2500 பண்ணைகளில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதாக ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் சுமார் ஐந்து கோடி கோழிகள், வாத்துகள், வான்கோழிகள் பலியாகியுள்ளன இதற்கான தடுப்பூசி போடுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.