மதுரை டிச, 21
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்நிலையில் வர இருக்கும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக கால்நடை துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். இதில் நெறிமுறைகள் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.