அமெரிக்கா டிச, 21
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃபெர்ண்டேல் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 70 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரம் குறித்து இன்னும் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.