மதுரை டிச, 16
மேலூரில் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் பெரியாறு ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.
தற்போது விளைந்து வரும் நெற்பயிரை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணப்பட்டுவாடா விவசாயி களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலூர் பெரியாறு ஒரு போக விவசாயிகள் சங்க செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள், கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.