சென்னை டிச, 16
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் விபரங்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது. அந்த விவரங்கள் அடிப்படையில் குழந்தைகளின் வீட்டுக்கே நேரடியாக சென்று அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க பணியாற்ற வேண்டும். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மூலம் குழு அமைத்து ஜனவரி 11 வரை இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.