திருப்புல்லாணி டிச, 10
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில்
திருப்புல்லாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சங்கத்திற்கு உட்பட்ட திருப்புல்லாணி, கஞ்சிரங்குடி, குதக்கோட்டை ஆகிய வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கிராம விவசாயிகளுக்கு மாபெரும் விவசாய கடன் மேளா வரும் 12 .12.2022 திங்கள் கிழமை காலை 10:30 மணிக்கு காஞ்சிரங்குடி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட செங்கல் நீரோடை மற்றும் குதக்கோட்டை வருவாய் கிராமத்திலும் மாபெரும் விவசாய கடன் மேலா நடைபெறுகிறது.
இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம் மேலும் கால்நடை வளர்ப்பிற்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்களாக புகைப்படங்கள் போட்டோ நான்கு, நடப்பாண்டு பத்து ஒன்னு பட்டா நகல், கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் வங்கி கணக்கு புத்தகம் நகல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.