புதுடெல்லி டிச, 6
பிரபல பெரு நிறுவனமான பெப்சி தங்கள் ஊழியர்களுக்கு புதிய அதிர்ச்சியை கொடுக்க தயாராகியுள்ளது. அமேசான், மெட்டா போன்ற பெரும் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், பெப்சியும் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அளித்த தகவலின் படி பணவீக்கம் மற்றும் சலவை குறைக்க நூற்றுக்கான ஊழியர்களை பெப்சி நிறுவனம் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.