மதுரை டிச, 6
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார். மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கண்ணன், மாரிசாமி, முத்து இருளாண்டி,அண்ணா தொழிற்சங்க செயலாளர் வையமாரி துரை, மீனவரணி செயலாளர் ராமநாதன், ஒத்தக்கடை பாண்டியன், உசிலைபிரபு, மிசா செந்தில் மற்றும் உள்பட 1000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.