வேதாரண்யம் நவ, 29
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார். வேதாரண்யம் வட்ட செயலாளர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மாநில தலைவர் அன்பரசு, மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல், மாநில செயலாளர் டானியல் ஜெயசிங், நாகை மாலி எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.