கோயம்புத்தூர் ஆகஸ்ட், 8
தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதால் ஒரே நாளில் 119 மில்லியன் யூனிட் காற்றாலை மின்உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது என்று காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரெங்கையன் தெரிவித்தார்.
மேலும் 13 தமிழகத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 13 ஆயிரம் காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் காற்று அதிகமாக வீசும்போது காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்து தமிழகத்தின் மின்தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்கிறது. அந்த வகையில் ஆடிமாதமான தற்போது காற்றாலை உற்பத்தி அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in