Spread the love

நாகப்பட்டினம் நவ, 26

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் சிறப்பு மக்கள்நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஊராட்சியில் கடந்த முறை கணபதிதேவன்காடு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு சாலையை ரூ.34.86 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட சாலை அமைக்கவும், சிறுதலைக்காடு சாலையை ரூ.14.84 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக அமைக்கவும், கணபதிதேவன்காடு அடப்போடை சாலையை ரூ.14.05 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பி சாலையாக மாற்றும் பணியையும் வழங்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது ரூ.25.99 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான ஆணை, ஆவடைக்கோன் காடு மயான சாலையில் ரூ.27.76 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு ஜல்லி சாலையாக மாற்றுவதற்கும், கணபதி தேவன் காடு மயான கொட்டகையின் கூரை அமைக்கும் பணிக்காக ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலும் மூன்று பணிகள் நடைபெறுவதற்கான ஆணை வழங்கப்படுகிறது.

இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 59,150 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 150 பயனாளிகளுக்கு சுமார் ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

இம்முகாமில் வருவாய் அலுவலர் ஷகிலா, வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின், வேளாண் இணை இயக்குனர் அகண்டாராவ், ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், ஊராட்சிமன்ற தலைவர்கள் சத்தியகலா, தேவி தமிழரசி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணகி, மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர் உதயம் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ராஜ், பாஸ்கர் தாசில்தார் ஜெயசீலன் தனி வட்டாட்சியர்கள் ரமேஷ், வேதையன், மாதவன், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *