ராமநாதபுரம் நவ, 25
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பரமக்குடியில் நடைபெற்ற சிலம்பம் மற்றும் தற்காப்புக் கலை போட்டிகளில் பங்கேற்றனர்.
இப்போட்டியில் தேசிய அளவிலான 14 வயதுக்குட்பட்டோர் தனி நபர் பிரிவில், பத்தாம் வகுப்பு மாணவன் கதிர் வேல் தென்னிந்திய அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளார்.
மேலும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் மோஹித் மாவட்ட அளவில் (அடிமுறை) இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தென்னிந்திய அளவில் 13 வயதுக்கு உட்பட்டோர் (ஒத்த கம்பு ) பிரிவில் ஆறாம் வகுப்பு மாணவன் சக்தி வீர கணபதி தென்னிந்திய அளவில் முதல் இடமும், மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் மேபல் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தாளாளர் எம்.எம்.கே. முஹைதீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.