கீழக்கரை நவம்பர், 22
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ஒரு சில பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை தொடர்பாக கீழக்கரை துணை மின் நிலைய உதவி பொறியாளர் முத்துக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கீழக்கரை மற்றும் 11 கே.வி சின்ன மாயா குளம் பீடர் ஆகிய பீடர்களுக்கு உட்பட்ட பகுதிகளான வள்ளல் சீதக்காதி சாலை, வடக்குத் தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, கோகுல் நகர், சாலை தெரு, வரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம் பஜார், சங்கு வெட்டி தெரு இந்து பஜார் கஸ்டம்ஸ் ரோடு, பழைய மீன் மார்க்கெட், பைத்துன் மால்.
மேலும் 11 கே வி சின்ன மாயா குளம் பீடர்க்கு உட்பட்ட பகுதிகளான 500 பிளாட், மேலத்தெரு, வடக்கு தெரு, சின்னக் கடை தெரு, தெற்குத் தெரு, புதுக்குடி, சின்ன மாயாகுளம், மாவிலா தோப்பு, உமையான புரம், முல்லை நகர், மாலாக்குண்டு, 200 பிளாட், இந்திரா நகர், கும்பிடு மதுரை சிங்காரத்தோப்பு, பாரதி நகர், முள்ளுவாடி, சதக்கல்லூரி ஆழ்வார் கூட்டம், புதுமாயாகுளம், தொண்டலை முத்துராஜ்நகர், விவேகானந்தபுரம் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.