கீழக்கரை அக், 28
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நேற்று உசைனியா மகாலில் நடந்த VRM ஆயுர்வேதிக் ஹெல்த் கேர் சென்டர் திறப்புவிழாவில் கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை M.K.E. உமர் தலைமையில் நகர் மன்றத்தலைவர் செஹானாஸ் ஆபிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மேலும் கீழக்கரை வர்த்தகசங்க தலைவர் செய்யது ஜகுபர், செயலாளர் பாஸ்கரன், தெற்குத்தெரு ஜமாத் துணைத்தலைவர் ஃபவ்சுல் அலிய்யுர்ரஹ்மான், அல்பய்யினா பள்ளி தாளாளர் ஜாபிர் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் துவக்கவுரை நிகழ்த்தினார். மருத்துவர் அப்துல் ஹமீது RMP ஆயுர்வேத சிறப்புகளை கூறினார்.
மேலும் சிவகங்கை நவநீதகிருஷ்ணன், செட்டிங்கோட்டை ஜெகதீசன், செம்பிலாங்குடி சரவணன், இரத்த உறவுகள் ஹாதில் ஆகியோர் உரையாற்றினர். தொழிலதிபர் தொண்டி சுலைமான் ஆயுர்வேதிக் மருந்துகளின் தன்மையை புரியும்படி எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியை கீழை ஜஹாங்கிர் அரூஸி தொகுத்து வழங்கினார். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் லாஹிதுகான், நகர் மன்ற உறுப்பினர்கள் 8 வது வார்டு MMK முகம்மது காசிம்,15 வது வார்டு டல்சி மற்றும் மக்கள் டீம் காதர், தினமல்லி சித்தீக் உட்பட ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி முடிவில் பரீதாஸ் சுபைர் நன்றி கூறினார். இதன் நிறுவனர் VRM சீனி முகைதீன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.