கீழக்கரை அக், 25
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளியில், UNFCCC , குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் எர்த் சேஃப்டி வால்வு இணைந்து நடத்தும் சர்வதேச அளவிளான COP’27 உலக மாநாட்டின் பருவநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 15 க்கும்மேற்பட்ட அமைப்புகளிலும், 17 UN SDG களில் பணிபுரியும், எர்த் சேஃப்டி வால்வு அமைப்பின் இயக்குநரான ஆயிஷத் ருக்ஸானா, பள்ளியின் முதல்வர் ஆதி அருணாசலம், பள்ளி ஒருங்கிணைப்பாளர் இஸ்ரத் பரிதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக 5 ம் வகுப்பு மாணவன் சையத் அஹ்மத் நூரன் இறைவணக்கம் பாடி, 9 ம் மாணவி நபிஹா வரவேற்புரை வழங்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆயிஷத் ருக்ஸானா துவக்க உரையை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களாக பள்ளியைச் சார்ந்த மாணவிகள் இஸ்ரத் பரிதா, ஆமினாத் ரில்ஹா, அமருன் ஃபாயிஹா, மரியம் ஆசீரா, முஃப்லிஹா, அஷிரா, வநீதா, சைபுல்லா ஆகியோர் முன்னின்று செயல்பட்டனர்.
இந்நிகழ்வில் உடை அலங்கார போட்டி, வரைதலில் துவங்கி ஓவியம், சுவர் ஓவியம், தெருக் கலை, மாடல் மேக்கிங், சொற்பொழிவு, பெஸ்ட் அவுட் ஆஃப் வேஸ்ட், துணிகளில் ஓவியம், கிளைமெட் கேன்வாஸின் பேரணிகள் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இதில் பருவநிலை மாற்றத்திற்கான காரணங்கள், புவி வெப்பமடைதலை தடுக்கும் விதமாக கண்ணாடி வாப்பா சர்வதேசப்பள்ளி மாணவ -மாணவிகள் புவியை காத்திடல், சுற்றுச்சூழலைப் பேணல் தொடர்பான வாசகப் பதாகைகளை ஏந்தி பேரணி நடத்தி முழக்கமிட்டனர்.
இந்த நிகழ்வு தமிழ்நாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள எந்த நிறுவனத்திற்கும் வழங்கப்படவில்லை. இந்த சிறப்பு நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் மிகவும் குறைவான பள்ளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டன. நவம்பர் 6 முதல் 18 வரை எகிப்தின் ஷாம் எல் ஷேக்கில் நடக்கும் COP’27 நிகழ்வின் போது அனைத்து பங்கேற்பாளர்களின் உள்ளீடுகளும் காண்பிக்கப்படும் என்பதும், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை தலைமை அமைப்பிடமிருந்து பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சிக்கு மாணவர்கள், பெற்றோர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.