கீழக்கரை அக், 6
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சாலைத்தெருவில் அமைந்திருக்கும் தமிழ்நாடு வக்பு வாரியதிற்கு பாத்தியமான 18 வாலிபர்கள் தர்ஹாவை, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினமான அப்துல் ரஹ்மான் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மேலத்தெரு உஸ்வத்துன் ஹசனா, முஸ்லீம் சங்க தலைவரும் ஜமாத் தலைவருமான யூசுப் சாஹிப், பொருளாளர் ஹாமீது இப்ராஹிம் உட்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் 18 வாலிபர்கள் சஹீத் கல்வி மற்றும் அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) தலைவர் ஜாஹிர் ஹுசைன், செயலாளர் ஷாஹுல் ஹமீது, கமிட்டி நிர்வாகிகள், அனைத்து சமுதாய கூட்டமைப்பு நிர்வாகிகள், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இச்சந்திப்பின் போது வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் ஜியாரத் செய்வதற்கு தர்ஹாவிற்கு வருவதாலும் குறிப்பாக பெண்கள் அதிகமாக வந்து செல்வதால் அவர்களின் வசதிக்கேற்ப தர்ஹாவின் வளாகத்தில் தொழுகைக் கூடம் கட்டித்தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை பரிசீலனை செய்வதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த தர்ஹா தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து தற்போது மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக பிரிவு.