ஜூலை, 23
பாயில் படுப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா தெரிந்து கொள்ளுங்கள்.
இப்போது அனைவரும் கட்டில் மெத்தையில் தான் உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்…
பாயில் படுத்து தரையில் உறங்குவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
பாய் உடல் சூட்டை உள் வாங்கக்கூடியது இதனால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாக இருக்கும் . உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களை தடுக்கும் .
கர்ப்பிணிப் பெண்கள் பாயில் படுத்தால் இடுப்பு வலி ,முதுகுவலி அறவே வரவே வராது.
பாயில் படுத்து உறங்கும் பழக்கம் உடைய பெண்களுக்கு பிரசவ நேரத்தில் அறுவை சிகிச்சை நடக்காமல் சுகப் பிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பிறந்த குழந்தையை பாயில் படுக்க வைப்பதால் அவர்களின் முதுகு எலும்பு சீராக இருக்கும் அவர்களுக்கு கழுத்து சுளுக்கு பிடிக்க வாய்ப்பே இல்லை அவர்கள் வேகமாக வளர்வதற்கு உதவி செய்கிறது.
பள்ளியில் படிக்கும் பருவ வயது ஆண்கள் ,பெண்கள் பாயில் படுப்பதால் அவர்களுக்கு இளமையில் கூன் விழும் பிரச்சனை இருக்காது.