கீழக்கரை ஆக, 28
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முஹைதீனியா பள்ளி வளாகத்தில் நேற்று பொது சுகாதாரத் துறை மற்றும் வடக்குத்தெரு சமூக நல அமைப்பு இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் சுகாதாரபணிகளின் துணை இயக்குனர் அஜித் பிரபு குமார் நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து மருத்துவர் செய்யது ராசிக்தீன் முன்னின்று முகாமை நடத்தி வைத்தார்.
இதில் வடக்குத்தெரு சமூக நல அமைப்பு நிர்வாகிகள், மற்றும் கீழக்கரை நகர்மன்ற 1, 7 மற்றும் 9 வார்டு உறுப்பினர்கள் முகமது பாதுஷா, மீரான்அலி, நஸ்ருதீன் பஷீர், மிர்சா முகைதீன் இப்ராஹிம் உட்பட பல நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இம்முகாமை நடத்த ஊக்குவித்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் ஜானி டாம் வர்கீஸ், ராமநாதபுரம் சுகாதாரபணிகளின் துணை இயக்குநர், அஜித் பிரபு குமார், திருப்புல்லாணி வட்டார தலைமை மருத்துவர் செய்யது ராசிக்தீன், நாசா வடக்குத்தெரு சமூக நல அமைப்புகளுக்கு பொதுமக்கள் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.