மண்டபம் டிச, 10
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மீன் இறங்குதளம் கட்டப்பட்டு வருவதை நேற்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் குழு, உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடன் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், உதவி ஆட்சியர் நாராயண ஷர்மா, சட்டப்பேரவைச் செயலர் ஸ்ரீனிவாசன், இணைச்செயலாளர் தேன்மொழி, துணைச் செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.