ராமநாதபுரம் டிச, 9
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் ஊராட்சியில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் ஊரக வளர்ச்சித் துறையின் நாற்றங்கால் பண்ணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாற்றுகளின் வளர்ச்சி குறித்தும், அதற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார். உடன் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளனர்.