உத்திரகோசமங்கை நவ, 22
ராமநாதபுரம் மாவட்டம்
உத்தரகோசமங்கை சார்ந்த ரமேஸ், தங்கவேல் சகோதரர்கள் பட்டா மாறுதல் செய்வதற்காக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தமிழ் பண்டியனை அணுகி உள்ளனர். அவர்களிடம் ஒரு சென்ட்க்கு ஆயிரம் ரூபாய் விகிதத்தில் ஏழு சென்டுக்கு ஏழாயிரம் ரூபாய் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சகோதரர்கள் இருவரும் பணம் அதிகம் இல்லை என்று கூறி உள்ளனர். உடனே ஏழு சென்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் மட்டுமே பட்டா மாறுதல் செய்து தருவேன் என்று கிராம நிர்வாக அலுவலர் கூறியுள்ளார். லஞ்சம் வழங்க ஆர்வமில்லாத சகோதரர்கள் மறுநாள் லஞ்சம் ஒழிப்பு அதிகாரிகளை நேரில் சந்தித்து நடந்த விபரங்களை கூறியுள்ளனர்.
மேற்கண்ட சகோதரர்களின் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணம் 3000 ரூபாயை சகோதரர்கள் கொடுத்தனர். இதனை கிராம நிர்வாக அலுவலர் தமிழ் பாண்டியன் பெற்றுக்கொண்ட போது காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியதுடன் இதேபோன்று அதிரடி நடவடிக்கையை மாவட்டம் முழுவதும் தொடர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.